முதியோர் நகர்
காலத்தின் வளர்ச்சி, உலகத்தின் வேகம், இது போன்ற இன்னும் பல காரணங்களால் இன்றைய உலகத்தில் திரைகடல் ஓடி திரவியம் தேட வேண்டிய சூழ்நிலை உருவாகி வருகிறது. இன்று மகன், மகள்கள் தனது குடும்பாத்தைச் சேர்ந்து, வாழ்ந்து ஒரு குடும்பமாக இருந்தோ, அல்லது ஒரு ஊரிலோ ஏன் ஒரு நாட்டிலேயே இருப்பது கூட நடைமுறைக்கு ஒவ்வாத விசயமாக ஆகிவிட்டது. இந்த மாதிரி பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு வரும்போது நாமும் பல மாற்றங்களை ஏற்படுத்தி வாழ கற்று கொள்ளவேண்டும். எனவே தான் அரசாங்கம், சமுதாயம், ஆகியவைகள் தான் சில புதிய மாற்றங்களை முதலில் அங்கீகரிக்கவேண்டும்.
அப்படி இவர்கள் அங்கீகரித்தால்தான் மக்கள் மனதில் அது நன்மையாக இருக்கும் என்ற எண்ணம் உருவாகி, பல புதிய இடர்பாடுகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வாழக்கற்றுக்கொள்வார்கள். இந்த தாக்கத்தில் இன்றைய சூழலுக்கு எங்கள் சமுதாய உணர்வாக உருவாக்கப்பட இருப்துதான் "இந்த முதியோர் நகர் என்ற முத்தான திட்டம்".

